உலகம்

Oxford-AstraZeneca : உண்மையில் இரத்தம் உறைதலை அதிகரிக்குமா?

(UTV |  ஐரோப்பா) – Oxford-AstraZeneca கொவிட் தடுப்பூசியில் இரத்தம் உறைதலை அதிகரிக்கும் அபாயம் காணப்படுவதற்கான எந்தவிதமான அறிகுறிகளும் இல்லையென ஐரோப்பிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அத்துடன், கொவிட் தடுப்பூசி வழங்கப்பட்டவர்களுக்கு தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவாகவே காணப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

டென்மார்க், நோர்வே உள்ளிட்ட பல்வேறு நாடுகள் கொரோனா தடுப்பூசியினை பயன்படுத்துவதை இடைநிறுத்தியுள்ளதைத் தொடர்ந்து ஐரோப்பிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் நிறுவனம் இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.

தடுப்பூசியை பெற்றுக்கொண்ட சில நபர்களுக்கு இரத்தக் கட்டிகள் உருவாகியதாக வெளியான தகவலைத் தொடர்ந்து குறித்த நாடுகள் தடுப்பூசியினை பயன்படுத்துவதை இடைநிறுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன், இத்தாலியில் தடுப்பூசியை பெற்றுக்கொண்ட 50 வயதுடைய ஒருவர் இரத்தம் உறைதலுக்குள்ளாகி உயிரிழந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, கொவிட் தடுப்பூசியை பெற்றுக்கொண்ட ஐந்து மில்லியன் ஐரோப்பியர்களில் 30 பேர் thromboembolic எனும் நோய் தாக்கத்துக்குள்ளாகி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

மேலும் 4 வாரங்களுக்கு ஊரடங்கு நீடிப்பு

ஈரான் குலுங்கியது

கொரோனா அச்சுறுத்தல் – தாஜ்மஹால் மூடப்பட்டது