உள்நாடு

நிதியுதவியின் கீழ் நவீன ரயில் பெட்டிகள்

(UTV | கொழும்பு) – RITES Ltd நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு விநியோகிக்கப்படவுள்ள 160 ரயில் பெட்டிகளில் பத்து பெட்டிகளைக் கொண்ட முதல் தொகுதி கொழும்பை வந்தடைந்துள்ளது.

இந்தியாவின் EXIM வங்கி ஊடாக இலங்கையின் புகையிரத உட்கட்டமைப்பு அபிவிருத்திக்காக இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்படும் நிதி உதவியின் கீழ் இந்த திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான உடன்படிக்கை 2019 செப்டம்பரில் இலங்கை புகையிரத திணைக்களம் மற்றும் RITES Ltd நிறுவனத்தால் கைச்சாத்திடப்பட்டிருந்தது.

இலங்கை ரயில்வே திணைக்களத்தின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் இந்த பயணிகள் ரயில் பெட்டிகள் பிரத்தியோகமாக தயாரிக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக கரையோர சுற்றுச்சூழலை கவனத்தில் கொண்டு அதிலிருந்து ஏற்படும் தாக்கங்களிலிருந்து தப்பித்துக்கொள்ளும் வகையில் துருப்பிடிப்பதை தவிர்க்கும் விசேட தீந்தை, பொலியுரேதேன் வெளிப்பூச்சுக்களுடனான வெள்ளிரும்பு கலங்கள் உள்ளிட்ட விசேட தொழில்நுட்பங்களுடன் இந்த ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

‘ஜூன் மாதத்திற்கான எரிபொருள் இறக்குமதிக்காக 554 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவை’

தோட்ட தொழிலாளர்களின் சம்பளத்தை உயர்த்த முடியாது- பெருந்தோட்ட கம்பனிகள்

ஏற்றுமதி வருமான சட்டம் : வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு தாக்கம் இல்லை