வணிகம்

சதொச விற்பனை நிலையத்தில் பொருட்களின் விலைகள் குறைப்பு

(UTV | கொழும்பு) – சிவப்பு வெங்காயம், சிவப்பு அரிசு, உள்ளூர் உருளைக் கிழகங்கு மற்றும் ச.தொ.ச. விற்பனை நிலையங்களில் விற்பனை செய்யப்படும் பல பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி தற்சமயம் 300 ரூபாவுக்கு விற்கப்படும் ஒரு கிலோ கிராம் சிவப்பு வெங்காயத்தை 195 ரூபாவுக்கும், ஒரு கிலோ கிராம் உள்ளூர் உருளைக்கிழங்கினை 150 ரூபாவுக்கும், 93 ரூபாவுக்கு விற்கப்படும் ஒரு கிலோ கிராம் சிவப்பு அரிசியை 89 ரூபாவுக்கும் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த விலைகளானது இன்று முதல் அமுலுக்கு வரும் என்று வர்த்தக அமைச்சின் செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.

கடந்த பெப்ரவரி முதல் 27 அத்தியாவசியப் பொருட்களுக்கான விலைகளானது குறைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

இறக்குமதி செய்யப்படும் டின் மீன்கள் தொடர்பில் அவதானம்

தீபாவளியை முன்னிட்டு 15,000 ரூபாய் வீதம் முற்பணம் வழங்க அனுமதி

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி…