(UTV | கொழும்பு) – இலங்கை விமானப்படையின் பிரதானியாக ஏயர் வைஸ் மார்ஷல் பிரசன்னா பயோவை மார்ச் 09 முதல் அமுல்படுத்தும் வகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நியமித்துள்ளார்.
விமானப்படை தலைமையகத்தில் நேற்று காலை நடைபெற்ற விழாவில், விமானப்படை தளபதி ஏயர் மார்ஷல் சுதர்ஷனா பதிரானாவிடம் இருந்து ஏயர் வைஸ் மார்ஷல் பிரசன்னா பயோ நியமனக் கடிதத்தைப் பெற்றார்.