கிசு கிசு

ரஞ்சாவுக்கு விடுமுறை கோரி விண்ணப்பம்

(UTV | கொழும்பு) – நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டின் கீழ், கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு, மூன்றுமாதகால விடுமுறை கோரி, விடுமுறை விண்ணப்பமொன்று தாக்கல் செய்ய எதிர்கட்சி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்றைய பாராளுமன்ற அமர்வுக்கு அவரை அழைத்துவராவிடின், விடுமுறை விண்ணப்பத்தைத் தாக்கல் செய்வதற்கு இவ்வாறு தீர்மானித்துள்ளதாக கூறப்படுகின்றது.

அந்த விடுமுறை விண்ணப்பத்தை, எதிர்க்கட்சியின் பிரதான கொறடாவான பாராளுமன்ற உறுப்பினர் லக்‌ஷ்மன் கிரியெல்ல, சபைக்கு இன்று (09) சமர்ப்பிப்பார் என நம்பப்படுகிறது..

பாராளுமன்ற உறுப்பினர், மூன்று மாதங்கள் சபையமர்வில் பங்கேற்கவில்லை எனில், அவருக்கான விடுமுறை விண்ணப்பத்தை, பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து, அனுமதியையும் பெற்றுக்கொள்ளவேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

இன்னும் சில நேரத்தில் அமைச்சரவையில் மாற்றம்

சூப்பர் ஸ்டார் எல்லாம் சும்மா, லேடி சூப்பர் ஸ்டார் தான் கெத்து

சமூக வலைத்தளத்தில் சர்ச்சையை ஏற்படுத்திய ராதிகாவின் போஸ்டர்…