விளையாட்டு

மேற்கிந்தியத்தீவுகள் தொடரைக் கைப்பற்றியது

(UTV | மேற்கிந்தியத்தீவுகள்) – சுற்றுலா இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான டி20 போட்டியில் மூன்று விக்கெட்டுக்களால் வெற்றி பெற்று மேற்கிந்தியத்தீவுகள் தொடரை கைப்பற்றியுள்ளது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 131ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இலங்கை அணி சார்பில் தினேஷ் சந்திமால் அதிகபட்சமாக 54 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார்.

பதிலுக்கு 132 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 19 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 134 ஓட்டங்களை பெற்று வெற்றி இலக்கை அடைந்தது.

அதன்படி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2 :1 என்ற கணக்கில் மேற்கிந்திய தீவுகள் அணி கைப்பற்றியுள்ளது.

No description available.

No description available.

No description available.

No description available.

 

Related posts

கிரிக்கெட் தெரிவுக்குழுவின் தலைவர் உபுல் தரங்கவுக்கு பிடியாணை

editor

நான் எப்போதும் கூறுவது முடியினை நோக்காது பந்தினை நோக்குமாறு-சச்சின்

இலங்கை கிரிக்கட் அணி நியுசிலாந்துக்கு சுற்றுப் பயணம்