உள்நாடு

தனியார் பேரூந்து குடைசாய்ந்ததில் 35 பேருக்கு காயம்

(UTV |  பதுளை) – பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேரூந்து ஒன்று பதுளை – கொழும்பு பிரதான வீதியில் எல்ல அல்ப்ப பகுதியில் குடைசாய்ந்ததில் சுமார் 35 பேர் காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.

பதுளை பகுதியிலிருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு கொழும்பு பகுதிக்கு சென்ற குறித்த பேரூந்து இன்று(06) காலை 9 மணியளவில் பாதையை விட்டு விலகி சுமார் 10 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

பேரூந்து சாரதியின் கவனயீனம் காரணமாகவே இந்த விபத்து நேர்ந்ததாக நேரடி விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

இவ்விபத்தில் காயமடைந்த 35 பேரில், 10 பேர் பலத்த காயங்களுக்குள்ளாகியுள்ளனர், ஏனையோர் சிறு சிறு காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.

இவர்கள் பதுளை மற்றும் தெமோதர வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

 

Related posts

ஹஜ் சென்ற அக்கறைப்பற்று நபர் மரணம்

‘குறிப்பிட்ட காலவரையறையின்றி சர்வகட்சி அரசாங்கத்தில் இணையத் தயாரில்லை’ – அனுரகுமார

நாளையும் 7 1/2 மணித்தியால மின்வெட்டு