விளையாட்டு

அகில ஹெற்றிக் சாதனை

(UTV | கொழும்பு) – இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதலாவது இருபதுக்கு20 போட்டியில் அகில தனஞ்சய தொடர்ச்சியாக 3 விக்கெட்டுகளை கைப்பற்றி ஹெற்றிக் சாதனையை படைத்துள்ளார்.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் களத்தடுப்பை தேர்ந்தெடுத்தது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 131 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இலங்கை அணி சார்பாக தனது கன்னி இருபதுக்கு இருபது போட்டியில் விளையாடி பெத்தும் நிஷங்க 39 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொண்டார்

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 13.1 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 134 ஓட்டங்களைப் பெற்று வெற்றி இலக்கை அடைந்தமையும் குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

20 வருடங்களின் பின் தாய்நாட்டுக்காக சேவையாற்றுவதில் சந்தர்ப்பம் கிடைத்ததில் மகிழ்ச்சி

சூப்பர் வெற்றியை பதிவு செய்த சூப்பர் கிங்ஸ்

ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் வாக் மகன்