உள்நாடு

டேம் வீதியில் பெண்ணின் சடலத்தை கைவிட்டு சென்ற சடலமாக மீட்பு [VIDEO]

(UTV | கொழும்பு) – கொழும்பு, டேம் வீதியில் பயணப் பொதியொன்றில் சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் கொலையுடன் தொடர்புடையதாக கருதப்படும் சந்தேநபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அவர், மொனராகலை படல்கும்புர 5 ஆம் கட்டை பகுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

சடலமாக மீட்கப்பட்ட பெண்ணும், அவரை பயண பொதியில் கொண்டு வந்து டேம் வீதியில் விட்டு செல்லும் நபரும், கடந்த 28ம் திகதி ஹங்வெல்லை பேருந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள விடுதி ஒன்றிற்கு செல்லும் காட்சி சீ.சி.ரி.வியில் பதிவானதாக அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் மறுநாள் அந்த விடுதியில் இருந்து பயண பொதியொன்றுடன் சந்தேகநபர் மாத்திரம் வெளியேறும் காட்சியும் அதில் பதிவாகியுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

இதனையடுத்து சந்தேகநபர் ஹங்வெல்லையில் இருந்து புறக்கோட்டைக்கு பயணிக்கும் பேரூந்து ஒன்றில் ஏறும் காணொளியும் கிடைக்கப்பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இந்நிலையில், மேற்கொள்ளபட்ட விசாரணைகளின் அடிப்படையில் சந்தேகநபர், புத்தல பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் விடுமுறையில் சென்றுள்ள உப பொலிஸ் பரிசோதகர் என தெரிய வந்துள்ளதாகவும் அவர் மேலும் மேலும் தெரிவித்திருந்தார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

உத்தியோகபூர்வமாக ஒப்படைக்காமல் ஒவ்வொரு இடங்களில் நிறுத்தப்பட்ட வாகனங்கள் தொடர்பில் விசாரணை

editor

ரயில் கட்டணம் அதிகரிப்பு

வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவு – மஹிந்த ராஜபக்ஷ