உள்நாடு

பாத்திமா மரணம் : தாயும் பூசகர் பெண்ணும் விளக்கமறியலில்

(UTV | காலி) – மீகஹவத்தை பிரதேசத்தில் இடம்பெற்ற மத சடங்கொன்றின் போது சிறுமியொருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சிறுமியின் தாய் மற்றும் மத சடங்கினை மேற்கொண்ட பெண் இன்று(01) மஹர நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர்.

மத சடங்கினை மேற்கொண்ட பெண் குறித்த சிறுமியை பிரம்பால் அடித்துள்ள நிலையில் தெல்கொட மீகஹவத்தை பிரதேசத்தை சேர்ந்த 9 வயதுடைய பாத்திமா ரிப்கா என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த சிறுமியின் சடலம் தொடர்பான பிரேத பரிசோதனை இன்று(01) ராகமை வைத்தியசாலையில் இடம்பெறவுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பில் இதுவரை 6 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் ​மேலும் தெரிவித்தார்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

 

Related posts

சஜித் பிரேமதாசவுக்கு ‘சாசன கீர்த்தி தேசாபிமான ஸ்ரீலங்கா ஜனரஞ்சன’ பட்டம்

ஜூலை 12 – தேசிய துக்க தினமாக அறிவிப்பு

பாம் எண்ணெய் தடை : பேக்கரி உற்பத்திகளில் வீழ்ச்சி