(UTV | இந்தியா) – இம்முறை ஐபிஎல் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடருக்கான வீரர்களை தெரிவு செய்யும் ஏலம் கடந்த 18ம் திகதி இடம்பெற்று இருந்தது.
குறித்த ஏலத்தின் போது வீரர்களை தெரிவு செய்யும் நிகழ்வில் ஷாருக்கானின் பிள்ளைகளான ஆர்யன் மற்றும் சுஹானா ஆகியோரின் வருகை அனைவரையும் ஈர்த்திருந்தது.
ஷாருக் இம்முறை ‘கொல்கத்தா நைட் ரைடர்ஸ்’ அணியினை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் அனுசரணையினை வழங்கியிருந்தார். அதில் பங்கேற்கவே இவர்களும் வந்திருந்தனர்.
மேலும், இந்தியா அணியின் நட்சத்திரமாக இருந்த சச்சின் தெண்டுல்கர் இனது மகன் அர்ஜுன் தெண்டுல்கர் ‘மும்பை’ அணிக்கு ஏலத்தில் வாங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.