(UTV | கொழும்பு) – கொவிட்-19 தொற்றால் உயிரிழப்போரின் உடல்களை தகனம் மற்றும் அடக்கம் செய்வது தொடர்பான புதிய வழிகாட்டல்களை தயாரிப்பதற்காக, குறித்த விடயம் தொடர்பாக ஆராய நியமிக்கப்பட்டுள்ள நிபுணர் குழு இன்று(27) கூடவுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
குறித்த வழிகாட்டல்களை அடுத்தவார முற்பகுதியில் அறிவிக்க உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொவிட்-19 காரணமாக உயிரிழப்பவர்களின் சரீரங்களை அடக்கம் செய்ய அனுமதியளிக்கும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் கடந்த 25ம் திகதி இரவு வெளியிடப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.