வணிகம்

வாகன இறக்குமதி துறையை பாராமரிக்கத் திட்டம்

(UTV | கொழும்பு) – நாட்டின் அந்நிய செலாவணி, வெளிச்செல்லும் அளவை குறைப்பதன் மூலம் வாகன இறக்குமதி துறையை பாராமரிப்பதற்கு திட்டமொன்று தயாரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் கலந்துரையாடுவதற்கு எதிர்பார்ப்பதாக அந்த சங்கத்தின் செயலாளர் அரோஷ் ரொத்ரிகோ நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் 19 ஆம் திகதிக்கு பின்னர் வாகன இறக்குமதி நடவடிக்கைகளை முற்றிலும் இடைநிறுவதற்கு அரசாங்கம் தீர்மானித்திருந்ததன் விளைவாக இந்த துறையில் பணிபுரியும் ஒரு லட்சம் பேர் நேரடியாக வேலையிழக்க நேரிடுவதோடு அவர்களை சார்ந்து வாழும் 4 லட்சம் பேர் பாதிக்கப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

 

Related posts

மட்டக்களப்பு மாவட்டத்தில் 61280 ஏக்கரில் சிறுபோகச் செய்கை

பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திகளின் விலைகளில் அதிகரிப்பு

மரக்கறிகளை கொள்வனவு செய்யும் நடவடிக்கை ஆரம்பம்