(UTV | கொழும்பு) – உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணை அறிக்கையை அமைச்சர் தினேஷ் குணவர்தன பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்தி அறிக்கையிட்டு, அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையை, சபையின் விசேட அனுமதியின் பேரில் சிங்கள மற்றும் ஆங்கில மொழி மூலமாக மாத்திரம் இந்த சந்தர்ப்பத்தில் முன்வைப்பதாக அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.
இதையடுத்து, கருத்து தெரிவித்த எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளரான நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல, இந்த அறிக்கை தொடர்பில் தங்களுக்கு மூன்று நாட்கள் விவாதம் அவசியமாகும் என சபாநாயகரிடம் கோரினார்.
அதனை கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிப்பதாக சபாநாயகர் பதிலளித்தார்.