வணிகம்

புழக்கத்திற்கு விடப்படவுள்ள புதிய 20 ரூபா நாணயம்

(UTV | கொழும்பு) –  இலங்கை மத்திய வங்கியின் 70 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் வெளியிடப்பட்ட புதிய 20 ரூபாய் நினைவு நாணயம் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் பேராசிரியர் டபிள்யூ.டி. லக்ஷமனால் நேற்று (24) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வழங்கி வைக்கப்பட்டது.

இது இலங்கை மத்திய வங்கியின் 70 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் வெளியிடப்பட்ட நினைவு நாணயம் ஆகும்.

நாணயம் 7 பக்க வடிவத்துடன் நிக்கல் பூசப்பட்ட எஃகு மூலம் தயாரிக்கப்பட்டுள்ளது. 05 மில்லியன் நாணயங்கள் எதிர்வரும் மார்ச் 03 ஆம் திகதி முதல் புழக்கத்தில் விடப்படும் என்று இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

வர்த்தக நிலையங்கள் மற்றும் சிற்றூண்டிச்சாலைகளில் சுற்றிவளைப்பு நடவடிக்கை ஆரம்பம்

நாட்டரிசி மற்றும் சம்பா அரிசிக்கு உச்ச கட்ட விலை…

ஜப்பானுக்கான ஏற்றுமதியினை அதிகரிக்க நடவடிக்கை…