உலகம்

இராணுவத்தில் சேர சவுதி அரேபிய பெண்களுக்கு அனுமதி

(UTV | சவுதி அரேபியா) – சவுதி அரேபிய பெண்கள் இராணுவத்தில் சேரலாம் என சவுதி பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.

சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் தொடர்ச்சியாக பெண்களுக்கு ஆதரவாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் தற்போது சவுதி அரேபிய பெண்கள் இராணுவத்தில் சேரலாம் என்று சவுதி பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.

சவுதி பெண்கள் சவுதி அரேபிய இராணுவம், ராயல் சவுதி வான் பாதுகாப்பு, ராயல் சவுதி கடற்படை, ராயல் சவுதி ஏவுகணை படை மற்றும் ஆயுதப்படை மருத்துவ சேவைகளில் சேரலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு சில நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளது.

அதாவது, பெண்கள் ராணுவத்தில் பணியாற்ற பெண்ணின் வயது 21 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும். உயரம் 155 சென்டிமீட்டர் அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும். சவுதி அல்லாதவருடன் திருமணம் செய்து இருக்க கூடாது.

திருமணம் முடிக்காதவர் ராணுவத்தில் சேர்ந்தால் சவுதி அல்லாதவருடன் திருமணம் செய்து கொள்ள கூடாது என்ற பல நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

வெளிநாட்டு பயணிகளுக்கான தடையை நீக்கியது இந்தியா

மூன்று மாதங்களுக்குப் பிறகு ஈபிள் டவர் மீண்டும் திறப்பு

அதிகரிக்கும் கொரோனா – ஸ்பெயினில் மீண்டும் அவசரநிலை