உள்நாடு

முஸ்லிம் பிரதிநிதிகளுடனான இம்ரான் கானின் சந்திப்புகள் இரத்து

(UTV | கொழும்பு) – பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், இன்று மாலை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.

இந்நிலையில், அவருடன் நடத்தப்படவிருந்த முக்கிய சந்திப்புகள் இரத்து செய்யப்பட்டுள்ளன என தகவல்கள் தெரிவிக்கின்றன.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியூதீன் மற்றும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் ஆகியோருடன் முக்கிய சந்திப்பு நடத்தப்படவிருந்தது.

எனினும், அந்த சந்திப்புகள் இரண்டும் இரத்துச் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்பு காரணங்களுக்காகவே இவ்விரு சந்திப்புகளும் இரத்துச் செய்யப்பட்டுள்ளன என வட்டாரத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

 

Related posts

குளிரூட்டப்பட்ட தேங்காய் இறக்குமதியாகும் நடவடிக்கை ஆரம்பம்

தொழிற்சங்க நடவடிக்கையில் 17 தொழிற்சங்கங்கள்!

புதிய அமைச்சு தொடர்பிலான அதிவிசேட வர்த்தமானி