உள்நாடு

இம்ரானுக்கு இந்திய வான் பரப்பில் பறக்க அனுமதி

(UTV | கொழும்பு) – இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டு இலங்கைக்கு இன்றைய தினம் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை அழைத்து வரும் விமானம் இந்திய வான் பரப்பில் பறப்பதற்கு இந்திய அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.

இந்த விஜயம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் அழைப்பின் பிரகாரம் இடம்பெறுகின்றது.

இதன்போது பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். அத்துடன் வர்த்தக மற்றும் முதலீட்டு மாநாட்டிலும் அவர் கலந்துகொள்ளவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

 

Related posts

விகாரையின் நிர்மான பணிகள் – கிழக்கு ஆளுநரின் உத்தரவின் பேரில் நிறுத்தம்!

சஜித் ஹிருணிகாவை சந்தித்தார்

நாளை 12 மணி நேர நீர் வெட்டு