உள்நாடு

இம்ரான் கான் நாளை தாயகத்திற்கு

(UTV | கொழும்பு) – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் அழைப்பின் பேரில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இரு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நாளை(23) இலங்கை வரவுள்ளார்.

அவர் தமது விஜயத்தின் போது, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருடன் இருதரப்பு சந்திப்புக்களில் கலந்து கொள்ளவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

அத்துடன் வரத்தகம், முதலீடு மற்றும் விளையாட்டு இராஜதந்திர முயற்சிகள் உட்பட பல விடயங்கள் தொடர்பான உயர்மட்ட கலந்துரையாடல்களையும் இதன்போது நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ள நிலையில், நாளை அலரி மாளிகையில் இடம்பெறவுள்ள இருதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் நிகழ்விற்கு இலங்கை மற்றும் பாகிஸ்தான் பிரதமர்கள் இருவரும் தலைமை தாங்குவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : இரு நாள் விவாதம்

“காசாவுக்கு குடிநீர் வழங்க இஸ்ரேல் ஒப்புதல்”

கரையோர மார்க்கத்தில் பயணிக்கும் ரயில் நேரங்களில் மாற்றம்