(UTV | கொழும்பு) – நாட்டில் கடந்த 24 மணித்தியாலத்தில் 514 புதிய கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி,
105 – கொழும்பு
51 – களுத்துறை, இரத்தினபுரி
25 – மாத்தளை
24 – அம்பாறை
19 – கேகாலை
13 – முல்லைத்தீவு, வெளிநாட்டு வருகை
12 – குருணாகல்
11 – காலி, பதுளை, அனுராதபுரம்
9 – நுவரெலியா, மட்டக்களப்பு
5 – புத்தளம்
4 – கிளிநொச்சி
1 – வவுனியா, திருகோணமலை, மன்னார், மொனராகலை, மாத்தளை
இதனால் இலங்கையில் இதுவரை அடையாளம் காணப்பட்ட மொத்த கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையானது 78,420 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை நேற்றைய தினம் கொரோனா தொற்றுக்குள்ளான 647 நோயாளர்கள் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறியுள்ளனர். அதனால் குணமடைந்தோர் எண்ணிக்கையும் 71,823 ஆக அதிகரித்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலை மற்றும் சிகிச்சை நிலையங்களில் 6,167 பேர் சிகிச்சை பெற்று வருவதுடன், சந்தேகத்தின் அடிப்படையில் 685 பேர் தொடர்ந்தும் வைத்தியக் கண்காணிப்பில் உள்ளனர்.
இதேவேளை இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 08 பேர் நேற்று (18) உயிரிழந்துள்ளமை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 430 ஆக அதிகரித்துள்ளது.