(UTV | கொழும்பு) – சிறைச்சாலை கைதி ஒருவரின் வழிநடத்தலில், பிலியந்தலை பகுதியில் 3 கிலோகிராம் ஹெரோயினுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
நேற்றிரவு (16) முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
47 வயதான குறித்த சந்தேகநபர், ஹெரோயினுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த போதே கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரை இன்று (17) கெஸ்பேவ நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி 7 நாட்களுக்கு தடுத்து வைத்து விசாரணை செய்ய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්