உலகம்

WTO-வின் முதல் பெண் தலைவராக நிகோசி நியமனம்

(UTV | கொழும்பு) – உலக வர்த்தக அமைப்பின் (World Trade Organization – WTO) முதல் பெண் தலைவராக நிகோசி ஒகோஞ்சோ இவேலா (Ngozi Okonjo-Iweala) நியமிக்கப்பட்டுள்ளாா்.

இதன் மூலம் WTO தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஆப்பிரிக்க கண்டத்தைச் சோ்ந்த முதல் நபர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார்.

164 உறுப்பு நாடுகளைக் கொண்ட உலகின் முதன்மையான வா்த்தக அமைப்பான WTO, நாடுகளுக்கு இடையிலான வா்த்தகம் தொடர்பான விதிமுறைகளை தீர்மானிக்கிறது.

முன்னதாக, அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவி வகித்தபோது, இவேலாவின் நியமனத்திற்கு இடையூறாக இருந்தார் எனவும் ஜோ பைடன் பதவியேற்றதை அடுத்து இவேலாவுக்கு இருந்த தடை நீங்கியதாகவும் கூறப்பட்டுள்ளது.

அவரது நியமனத்திற்கு பைடன் ஒப்புதல் வழங்கியுள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

எதிர்வரும் சில மாதங்களில் கொரோனாவுக்கு டாட்டா

கொரோனா பரிசோதனை நிறைவு- 454 பேருக்கு பாதிப்பு

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகியது