உள்நாடு

LNG மின் உற்பத்தி நிலையத்திலிருந்து மின்சார கொள்வனவுக்கு மின்சார சபைக்கு அனுமதி

(UTV | கொழும்பு) – கெரவலப்பிட்டியில் லக்தனவி நிறுவனத்தினால் நிர்மாணிக்கப்படும் 300 மெகாவாட் கொள்ளவிலான இலங்கையின் முதலாவது எல் என் ஜி (LNG) மின் உற்பத்தி நிலையத்திலிருந்து இலங்கை மின்சார சபை மின்சாரத்தை கொள்வனவு செய்வதற்கான உடன்படிக்கைக்கு இலங்கை பொது பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

அண்மையில் கூடிய ஆணைக்குழுவின் புதிய உறுப்பினர்கள் குழு இந்த உடன்படிக்கைக்கு அனுமதி வழங்கியதாக அதன் தவிசாளர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இந்த உடன்படிக்கையின் அடிப்படையில் 20 ஆண்டுகளுக்கு மின்சாரத்தைக் கொள்முதல் செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தவிசாளர் தெரிவித்தார்.

இந்த மின் உற்பத்தி நிலையத்தினால் விநியோகிக்கப்படும் ஒரு அலகு மின்சாரத்தின் விலை 14 ரூபாய் 98 சதமாகும்.

டீசல் மற்றும் இயற்கை எரிவாயு ஆகிய இரண்டையும் பயன்படுத்தி இந்த மின் உற்பத்தி நிலையத்தினால் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

அடுத்த வாரம் 3 நாட்களுக்கு பாடசாலைகளை நடத்த தீர்மானம்

இறக்குமதியாகிய இந்திய என்ஜின்களில் கோளாறு

தாமரை கோபுரத்தினை பார்வையிடும் நேரங்களில் மாற்றம்