(UTV | கொழும்பு) – விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ மற்றும் இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் உள்ளிட்ட நிறைவேற்றுக் குழுவை எதிர்வரும் மார்ச் மாதம் 15 ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றில் ஆஜராகுமாறு அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தின் அடுத்த தேர்தலுக்கு முன்னர் புதிய கிரிக்கெட் அரசியலமைப்பை உருவாக்கக் கோரி முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் சிவில் ஆர்வலர்கள் குழு தாக்கல் செய்த ரீட் மனு மீதான விசாரணைகள் இன்று(15) மேன்முறையீட்டு நீதிமன்றில் எடுத்துக் கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
முன்னாள் தேசிய அணி வீரர்களான முத்தையா முரளிதரன், சிதத் வெத்தமுனி மற்றும் மைக்கேல் திசரா, இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தின் முன்னாள் தலைவர்களான அனா புஞ்சீஹேவா, விஜய மலலசேகர மற்றும் ரியென்சி விஜெட்டிலேக் ஆகியோர் மனுதாரர்களாக உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.