(UTV | லெபனான்) – லெபனானில் கொரோனா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை இன்று(15) இரண்டாவது நாளாகவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.
Pfizer-BioNTech நிறுவனத்திடம் இருந்து 28,500 கொரோனா தடுப்பூசிகளை லெபனான் கொள்வனவு செய்துள்ளது.
21 இலட்சம் தடுப்பூசிகளின் ஒரு தொகுதியாகவே இந்த தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.