உள்நாடு

O/L மாணவர்களுக்கு மாவட்ட ரீதியாக பரீட்சை நிலையங்கள்

(UTV | கொழும்பு) – கொரோனா தொற்றினால் பாதிக்கப்படும் சாதாரண தர பரீட்சை மாணவர்களுக்கு பரீட்சையை எதிர்க்கொள்வதற்கு மாவட்ட மட்டத்தில் மத்திய நிலையங்கள் அமைப்பது தொடர்பில் பரீட்சை திணைக்களம் கவனம் செலுத்தியுள்ளது.

இவ்வாறான மாணவர்களுக்கு சிகிச்சை பெறும் மத்திய நிலையங்களில் இருந்து பரீட்சையை எதிர்க்கொள்வதற்கு வசதிகள் செய்யப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார்.

சம்பந்தப்பட்ட மத்திய நிலையம் சுகாதார சேவை பணிப்பாளர் நாயகத்தின் அனுமதிக்கு உட்பட்ட வகையில் அடையாளம் காணப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள மாணவர்கள் பரீட்சையை எதிர்கொள்வதற்கு வசதிகள் செய்யும் நோக்கில் அனைத்து பரீட்சை மத்திய நிலையங்களிலும் தனிமைப்படுத்தப்பட்ட வகுப்பறைகள் அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

2020 ஆம் ஆண்டுக்கான சாதாரண தர பரீட்சை மார்ச் மாதம் 07 ஆம் திகதி தொடக்கம் 4,513 மத்திய நிலையங்களில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

லிற்றோ எரிவாயுவின் விலை நாளை நள்ளிரவு முதல் குறைக்கப்படவுள்ளது!

பாடசாலைகளுக்கான கிறிஸ்மஸ் விடுமுறையில் திருத்தம்

சாய்ந்தமருது கடலரிப்பால் பாதிப்பு ; உரிய அதிகாரிகள் விரைவான நடவடிக்கை எடுக்க கோரிக்கை !