உலகம்

பைடன் அரசில் இந்திய – அமெரிக்க உறவு தழைக்குமா?

(UTV |  அமெரிக்கா) – அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்று இருக்கும் ஜோ பைடனின் உரைகள், இந்தியா உடனான உறவு, தொடர்ந்து மேல் நோக்கிச் செல்லும் என்றே உணர்த்துகின்றன. இருப்பினும் சில சர்வதேச விவகாரங்கள், இந்த இரு நாடுகளுக்கு இடையிலான உறவு முறையைக் கேள்விக்கு உள்ளாக்கலாம்.

முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் ஆட்சிக் காலத்தில், இந்தியா மற்றும் அமெரிக்காவுக்கு இடையில் ராஜரீக ரீதியிலான உறவுமுறைகள் மற்றும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த உறவுமுறைகள் அதிகரித்தன. பாகிஸ்தான் மற்றும் சீனாவுக்கு எதிரான பிரச்சினைகளில், இந்தியாவுக்கு அமெரிக்காவின் ஆதரவு தொடர்ந்து கிடைத்து வந்தது. இது போக அமெரிக்காவிடமிருந்து அதிநவீன போர்க் கருவிகளையும் இந்தியா பெற்று வந்தது.

இந்த விவகாரங்களில் இருநாட்டுக்கு மத்தியிலான உறவு தொடரும் என எதிர்பார்க்கப்படும் நேரத்தில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியின் தலைமையிலான அரசின் கீழ், மதச் சுதந்திரம் மற்றும் கருத்துச் சுதந்திரம் போன்ற விவகாரங்களை, அமெரிக்கா அணுகும் முறை மாறுபடலாம். வர்த்தக விவகாரங்களிலும் சில முரண்கள் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

 

Related posts

ட்ரம்புக்கு எதிரான விசாரணைகள் ஆரம்பம்

ஹமாஸ் போராளிகளுக்கு எதிராக தரைவழி தாக்குதலுக்கு தயாராகும் இஸ்ரேல்!

இம்ரான் கான் ஆட்சி தப்புமா?