உள்நாடு

அனைத்து நீதிமன்ற கட்டமைப்புகளும் டிஜிட்டல் மயம்

(UTV | கொழும்பு) – அனைத்து நீதிமன்ற கட்டமைப்பையும் டிஜிட்டல் மயப்படுத்துவதற்கான உடன்படிக்கை நேற்று கைச்சாத்திடப்பட்டுள்ளதாக நீதியமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

நீதிமன்ற கட்டமைப்பில் ஆவணங்களை பராமரித்தல், முகாமைத்துவம், வழக்குகள் குறித்த அறிக்கைகளை வைத்திருத்தல், விநியோகத்தில் உள்ளிட்ட அனைத்து நீதிமன்ற நடவடிக்கைகளும் இதன் மூலம் டிஜிட்டல் மயப்படுத்தப்படவுள்ளதாக நீதியமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த வேலைத்திட்டம் நீதியமைச்சு, நீதிச்சேவைகள் ஆணைக்குழு, தொழில்நுட்ப அமைச்சு என்பன இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப பிரதிநிதிகளுடன் இணைந்து செயற்படுத்தப்படவுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பிரதமரை பதவி விலகக் கோரிக்கை

மேலும் மூவர் பூரண குணம்; குணமடைந்தோர் 59

 மாணவியின்( காதலியின்) அந்தரங்க படங்களை சமூக வலைதளங்களில் பரப்பிய காதலன் கைது!