(UTV | கொழும்பு) – தனது 100 ஆவது போட்டியில் விளையாடிய ஜோ ரூட்டுக்கு இந்திய வீரர்கள் ஏதாவது நினைவுப் பரிசு கொடுத்தார்களா என இங்கிலாந்து அணியின் முன்னாள் தலைவர் மைக்கேல் வான் கேள்வி எழுப்பியுள்ளார்.
அவுஸ்திரேலிய அணியின் சுழல்பந்து வீச்சாளரான நாதன் லயன் பிரிஸ்பேன் காபா தனது 100 ஆவது போட்டியில் விளையாடினார். அதனால் அவரைக் கௌரவிக்கும் வகையில் இந்திய வீரர்கள் அனைவரும் கையெழுத்திட்ட ஜெர்ஸியை அவருக்கு வழங்கினர்.
இந்நிலையில் இப்போது சென்னை டெஸ்ட்டில் இங்கிலாந்து தலைவர் ஜோ ரூட் 100 ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடி இரட்டை சதம் அடித்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார். இந்நிலையில் ‘இந்த போட்டியில் லயனுக்கு கொடுத்தது போல ரூட்டுக்கு ஏதாவது நினைவுப்பரிசு கொடுத்தார்களா? யாராவது தனக்கு அதை தெளிவுப்படுத்த முடியுமா?’ எனக் கேட்டுள்ளார்.
BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්