உள்நாடு

தடுப்பூசி பெற இணையத்தளம்

(UTV | கொழும்பு) – கொவிட்-19 வக்சீன் பெற்றுக் கொள்வதற்கு ஆர்வமுள்ளவர்கள் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள இணையத்தளத்தில் தமது விவரங்களைப் பதிவு செய்து கொள்ளலாம் என அடிப்படை சுகாதார பராமரிப்பு, தொற்று நோய்கள் மற்றும் கொவிட் நோய் கட்டுப்பாட்டுக்கான இராஜாங்க அமைச்சு அறிவித்துள்ளது.

இந்த இணையத்தளத்தினூடாக பொது மக்களுக்கு வக்சீன் தொடர்பான சகல தகவல்களையும் பெற்றுக் கொள்ள வசதியளிப்பதுடன், கொவிட் 19 மற்றும் இராஜாங்க அமைச்சினால் முன்னெடுக்கப்படும் இதர திட்டங்கள் தொடர்பான தகவல்களையும் வழங்கும். இந்த இணையத்தளத்தை அறிமுகம் செய்து மருந்துப் பொருட்கள் தயாரிப்பு, விநியோகம் மற்றும் ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன குறிப்பிடுகையில், இலங்கையில் பயன்படுத்தப்படவுள்ள மூன்று வக்சீன்களுக்கான அனுமதி கேரும் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இந்த இணையத்தளத்தை www.statehealth.gov.lk எனும் இடுக்கினூடாக பார்க்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், பெருமளவானோர் ஒரே நேரத்தில் இந்த இணையப் பக்கத்தை அணுகி தமது தரவுகளை பதிவு செய்ய முயற்சிப்பதன் காரணமாக இந்தத் தளம் மிகவும் மந்தமாக இயங்குவதாகவும் அறிய முடிகின்றது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

சி.ஐ.டி. பொறுப்பின் கீழ் உள்ள யானைகளை உரிமையாளர்களிடம் ஒப்படைக்க உத்தரவு

குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 811 ஆக அதிகரிப்பு

சர்வதேச மகளிர் தின நிகழ்வு