(UTV | கொழும்பு) – ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கையில் நேற்று(10) நள்ளிரவு முதல் ஈடுபட்டுள்ளனர்.
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து முன்னெடுக்கப்படும் குறித்த இந்த தொழிற்சங்க நடவடிக்கையினால், அலுவலக ரயில் சேவைகளில் தாமதம் ஏற்படக்கூடும் என இலங்கை ரயில் நிலைய பொறுப்பதிகாரிகளின் சங்கம் தெரிவித்துள்ளது.
இன்றைய தினத்திற்குள் தீர்வு காணப்படுமாயின், தொழிற்சங்க நடவடிக்கையை கைவிடுவதாக ரயில் நிலைய பொறுப்பதிகாரிகளின் சங்கத்தின் த லைவர் சுமேத சோமரத்ன தெரிவித்துள்ளார்.
ரயில்வே திணைக்களத்தில் ஆளணி பற்றாக்குறை நிலவுவதாகவும் ஊழியர்களின் வெற்றிடங்களை நிரப்புவதற்கு திணைக்களத்தினால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.