உள்நாடு

மின் துண்டிப்பு தொடர்பான கால அட்டவணை

(UTV | கொழும்பு) – அவசரத் திருத்த பணிகள் காரணமாக அம்பாறை, கல்முனை மின் பொறியியலாளர் பிரிவில் மின் துண்டிப்பு இடம்பெறவுள்ளதாக, இலங்கை மின்சார சபையின் கல்முனை பிராந்திய மின் பொறியலாளர் அறிவித்துள்ளார்.

இன்று (09) காலை 08.30 மணி – மாலை 05 மணி
நிந்தவூர், சம்மாந்துறை ஆகிய மின் பாவனையாளர் சேவை நிலையத்துக்குட்பட்ட ஒலுவில் மற்றும் அட்டப்பளம், அம்பாறை வீதி, ஹிலால்புரம், வங்களாவடி, உடங்கா ஆகிய பகுதிகளில் மின் தடைப்படும்.

நாளை(10) காலை 08.30 மணி – மாலை 05 மணி
கல்முனை மின் பாவனையாளர் சேவை நிலையத்துக்குட்பட்ட கல்முனைப் பிரதேசம் மின் தடைப்படும்.

வியாழக்கிழமை (11) மாலை 04 மணி – மாலை 06 மணி
கல்முனை, நிந்தவூர், சாய்ந்தமருது ஆகிய மின் பாவனையாளர் சேவை நிலையத்துக்குட்பட்ட தரவைக் கோவில், கடற்கரைப்பள்ளி, அம்மன்கோவில், உடையார் வீதி, இஸ்லாமாபாத் வீட்டத்திட்டம், வீ.வீ. வீதி, ஒலுவில், வௌவலோடை, நிந்தவூர், தியேட்டர் வீதி, காரைதீவு, சாய்ந்தமருது, மாளிகைக்காடு, கல்முனைக்குடி ஆகிய பகுதிகளில் மின் தடைப்படும்.

சனிக்கிழமை (13) காலை 08.30 – மாலை 05 மணி
நிந்தவூர் மின் பாவனையாளர் சேவை நிலையத்துக்குட்பட்ட ஒலுவில், அன்சாரிபள்ளிவாசல் பகுதி, மீராநகர், நிந்தவூர் மற்றும் அட்டப்பள பகுதி ஆகிய பகுதிகளில் மின் தடைப்படும்.

17ம் திகதி காலை 08.30 மணி – மாலை 05 மணி
நிந்தவூர் மின் பாவனையாளர் சேவை நிலையத்துக்குட்பட்ட ஒலுவில், வௌவலோடை, நிந்தவூர், தியேட்டர் வீதி, சின்னப்பாலமுனை, உதுமாபுரம், திராய்க்கேனி, அட்டாளைச்சேனை, மீலாத்நகர் ஆகிய பகுதிகளில் மின் தடைப்படும்.

18ம் திகதி காலை 08.30 – மாலை 05 மணி வரை
சம்மாந்துறை மின் பாவனையாளர் சேவை நிலையத்துக்குட்பட்ட அம்பாறை வீதி. ஹிலால்புரம், வங்களாவடி, உடங்கா ஆகிய பகுதிகளில் மின் தடைப்படும்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பாராளுமன்ற புதிய செயற்குழு நியமனம்

இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்

ஒரே தீர்வு மக்களுக்கான நிரந்தர காணி உரிமையினை பெற்றுக்கொடுப்பதே – ஜீவன் தொண்டமான்

editor