கிசு கிசு

உங்கள் உயிரை காப்பாற்றியது நானே.. என் மீது கை வைத்து என்னை பகைத்துக் கொள்ள வேண்டாம்

(UTV | கொழும்பு) – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எச்சரிக்கை விடுத்து எதிர்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தனது முகநூலில் பதிவொன்றினை வெளியிட்டுள்ளார்.

“எதிரிக்கு முன்னால் வைத்து திறந்த தரை வழியாக நடப்பது ஆபத்தானது என்பதை நான் மீண்டும் கோட்டாபயவை நினைவுபடுத்துகிறேன்.

1991 யாழ்ப்பாணம் கோட்டையை பாதுகாக்கும் போரில் உங்கள் எதிராளியை திறந்த தரையில் எதிர்கொண்டு உங்களையும் உங்கள் படையினரினதும் உயிரை காப்பாற்றியது நான் உள்ளிட்ட முதலாவது சிங்க ரெஜிமென்ட் படையணி ஆகும்.

இற்றைக்கு 30 வருடங்கள் கடந்து 2021 இல் அரசியல் களத்தில் மீளவும் அதே தவறினை செய்யமாட்டீர்கள் என நான் எதிர்பார்க்கிறேன்.

தற்போது உங்கள் படையணி கட்டுப்பாட்டினை இழந்துள்ளது. உங்களுக்கு வாக்களித்த 69 இலட்ச மக்களும் உங்களை கேலி செய்வதன் மூலம், நீங்கள் அரசியல் ரீதியாக தனிமைப்படுத்தப்பட்டதாகத் தெரிகிறது. உங்கள் அதிகாரப் பசி ஆட்சி அந்த சக்தியாலேயே அழிக்கப்படும்.

எனவே, கோட்டாபயவுக்கு எனது அறிவுரை என்னவென்றால், நாடு உட்பட பெரும் நெருக்கடியில் இருக்கும் நேரத்தில், நான் உட்பட பொது எதிர்க்கட்சியின் அரசியல் தலைவர்கள் மற்றும் தோழர்களின் ஜனநாயக உரிமைகளை ஆக்கிரமித்து, மேலும் பிரச்சினைகள் மற்றும் நெருக்கடிகளை அதிகரித்துக் கொள்ள வேண்டாம்” எனத் தெரிவித்துள்ளார்.

Related posts

பிரியாவிடை பேச்சில் மகிந்தவுக்கு நன்றி தெரிவித்த மலிங்க(photo)

கொழும்பில் இளம் பெண்களுக்கு ஆபத்து!பொலிஸார் எச்சரிக்கை

10 வினாடிகளுக்கு குறைவாகவே பாலியல் தொல்லை – இது குற்றமில்லையெ நீதிமன்றம் தீர்ப்பு