(UTV | கொழும்பு) – நாட்டின் பொதுப்போக்குவரத்து சேவைகள் தொடர்பில் இன்று(08) முதல் விசேட கண்காணிப்பு நடைமுறைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
இதன்படி, பொதுப் போக்குவரத்து சேவைகளில் ஈடுபடும் பேரூந்து சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் மற்றும் பாடசாலை வாகன சேவைகளில் ஈடுபடும் சாரதிகள் மற்றும் உதவியாளர்கள் ஆகியோர் தொடர்பில் இந்த கண்காணிப்பு நடைமுறை முன்னெடுக்கப்படவுள்ளது.
குறித்த நபர்கள் கொரோனா தொற்று சுகாதார நடைமுறைகளை பின்பற்றுகின்றார்களா என்பது தொடர்பில் கண்காணிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், குறித்த நபர்களுக்கு எழுமாறாக ரெபிட் என்டிஜன் பரிசோதனையும் மேற்கொள்ளப்படவுள்ளது.
இதேவேளை , மேல் மாகாணத்தில் இருந்து வெளியேறும் பொதுப் போக்குவரத்து சேவைகள் தொடர்பிலேயே இவ்வாறு சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.