உலகம்

ஒக்ஸ்போர்டு / அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி செலுத்தும் திட்டங்களை தென்னாபிரிக்கா நிறுத்தியது

(UTV | தென்னாபிரிக்கா) – முன்னணி சுகாதார ஊழியர்களுக்கான ஒக்ஸ்போர்டு / அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி செலுத்தும் திட்டங்களை தென்னாபிரிக்கா நிறுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது.

ஒரு சிறிய மருத்துவ பரிசோதனையில், நாட்டில் ஆதிக்கம் செலுத்தும் வைரஸின் மிகவும் தொற்று மாறுபாட்டால் ஏற்படும் லேசான மற்றும் மிதமான நோயைத் தடுப்பதில் இது பயனுள்ளதாக இல்லை என்று அந்நாட்டு சகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந் நிலையில் அடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிவியல் ஆலோசனைகளுக்காக அரசாங்கம் காத்திருப்பதாக தென்னாபிரிக்க சுகாதார அமைச்சர் கூறினார்.

ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட ஆரம்ப தகவல்கள் அடிப்படையில் ஒக்ஸ்போர்டு / அஸ்ட்ராஜெனெகா கொவிட் -19 தடுப்பூசியின் இரண்டு அளவுகள் தென்னாபிரிக்காவில் முதன்முதலில் அடையாளம் காணப்பட்ட மாறுபாட்டிலிருந்து லேசான மற்றும் மிதமான கொவிட்-19 க்கு எதிராக “குறைந்தபட்ச பாதுகாப்பை” மட்டுமே வழங்கியுள்ளன.

சராசரியாக 31 வயதுடைய சுமார் 2,000 தன்னார்வலர்கள் ஆகியோரிடையே இந்த தடுப்பூசி ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் பாதி பேர் தடுப்பூசி பெற்றனர், பாதி பேர் மருந்துப்போலிகளை பெற்றனர்.

தென்னாபிரிக்கா கடந்த வாரம் அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியின் 1 மில்லியன் டோஸைப் பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

அகதிகள் விடயத்தல் அமெரிக்கா கருணை

ஈரான் ஜனாதிபதியின் மரணம்: இலங்கை ஆழ்ந்த அதிர்ச்சியும் கவலையும் அடைந்துள்ளது – ரணில்

அமெரிக்க அதிபருக்கும் சவுதி இளவரசர் சல்மானுக்கும் இடையே பேச்சுவார்த்தை