உள்நாடு

மூன்று மாதங்களுக்கு 27 அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு

(UTV | கொழும்பு) – எதிர்வரும் 8ம் திகதி முதல் 3 மாத காலங்களுக்கு 27 அத்தியாவசிய பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தண தெரிவித்துள்ளார்.

இன்று(05) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

லங்கா சதொச, கூட்டுறவு மொத்த விற்பனை நிலையங்கள், கியு-ஷொப் விற்பனையகங்கள் ஊடாக குறித்த நிவாரண விலையில் பொருட்களை கொள்வனவு செய்ய முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.

சிவப்பு அரிசி (ரத்து கெகுலு) 1kg : புதிய விலை 93 ரூபா –தற்போதைய விலை 106 ரூபா

வெள்ளை பச்சரிசி 1kg : புதிய விலை 93 ரூபா – தற்போதைய விலை 105 ரூபா

நாட்டரிசி (சுது நாடு) 1kg : புதிய விலை 96 ரூபா – தற்போதைய விலை 109 ரூபா

சம்பா 1kg : புதிய விலை 99 ரூபா – தற்போதைய விலை 120 ரூபா

கீரி சம்பா 1kg : புதிய விலை 125 ரூபா – தற்போதைய விலை 140 ரூபா

கோதுமை மா 1kg : புதிய விலை 84 ரூபா – தற்போதைய விலை 105 ரூபா

​வௌ்ளை சீனி 1kg : புதிய விலை 99 ரூபா – தற்போதைய விலை 110 ரூபா

சிகப்பு சீனி 1kg : புதிய விலை 125 ரூபா – தற்போதைய விலை 140 ரூபா

தேயிலை 100g : புதிய விலை 95 ரூபா – தற்போதைய விலை 130 ரூபா

பருப்பு அவுஸ்திரேலியா 1kg : புதிய விலை 165 ரூபா – தற்போதைய விலை 188 ரூபா

பெரிய வெங்காயம் இந்தியா 1kg : புதிய விலை 120 ரூபா – தற்போதைய விலை 140 ரூபா

உருளைக்கிழங்கு உள்நாடு 1kg : புதிய விலை 180 ரூபா – தற்போதைய விலை (216 – 220) ரூபா

உருளைக்கிழங்கு பாகிஸ்தான் 1kg : புதிய விலை 140 ரூபா – தற்போதைய விலை 190 ரூபா

கடலை 1kg : புதிய விலை 175 ரூபா – தற்போதைய விலை 225 ரூபா

காய்ந்த மிளகாய் 1kg : புதிய விலை 495 ரூபா – தற்போதைய விலை 550 ரூபா

ரின் மீன் உள்நாடு 425g : புதிய விலை 220 ரூபா – தற்போதைய விலை 240 ரூபா

ரின் மீன் இறக்குமதி 425g : புதிய விலை 265 ரூபா – தற்போதைய விலை 280 ரூபா

நெத்தலி தாய்லாந்து 1kg : புதிய விலை 575 ரூபா – தற்போதைய விலை 700 ரூபா

தோலுடன் கூடிய கோழி 1kg : புதிய விலை 400 ரூபா – தற்போதைய விலை 430 ரூபா

கட்டி உப்பு 1kg : புதிய விலை 43 ரூபா – தற்போதைய விலை 55 ரூபா

பால்மா 400g : புதிய விலை 355 ரூபா – தற்போதைய விலை 380 ரூபா

​சோயா எண்ணை 500ml : புதிய விலை 310 ரூபா – தற்போதைய விலை 470 ரூபா

சவர்க்காரம் (BCC) 115g : புதிய விலை 43 ரூபா – தற்போதைய விலை 53 ரூபா

சவர்க்காரம் 650g : புதிய விலை 260 ரூபா – தற்போதைய விலை 325 ரூபா

வாசனை சவர்க்காரம் 100g : புதிய விலை 56 ரூபா – தற்போதைய விலை 63 ரூபா

கை சுத்தீகரிப்பு (Hand sanitizer) 100ml : புதிய விலை 250 ரூபா – தற்போதைய விலை 350 ரூபா

முகக்கவசம் (SLS தரச் சான்றிதழுடன் கூடிய) : புதிய விலை 14 ரூபா – தற்போதைய விலை 25 ரூபா

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

அரச பணியாளர்களின் ஓய்வு வயது குறித்து புதிய சுற்றறிக்கை

எரிபொருள் வரியை நீக்குமாறு எரிசக்தி அமைச்சர் நிதி அமைச்சரிடம் கோரிக்கை

ரஞ்சனின் பாராளுமன்ற உறுப்புரிமை இரத்து