உலகம்

மியன்மார் இராணுவம் வன்முறையில் இருந்து விலகி செயற்பட வேண்டும்

(UTV | மியன்மார்) – மியன்மார் இராணுவம் அதிகாரத்தை கைவிட்டு, ஆட்சி கவிழ்ப்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அதிகாரிகளை விடுவிக்க வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வலியுறுத்தியுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நேற்று(04) நிகழ்த்திய தமது வெளியுறவு கொள்கையில் இதனை வலியுறுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்கா அதன் நட்பு நாடுகளுடனும் கூட்டாளர்களுடன் இணைந்து செயற்படுகின்றது.
ஜனநாயக ரீதியிலான மக்களின் விருப்பத்தையும் நம்பகமான தேர்தல் முடிவுகளையும் அழிக்க முயற்சிக்க கூடாது.

எனவே, மியன்மார் இராணுவம் தடுத்து வைத்துள்ள அதிகாரிகளை விடுவித்து கைப்பற்றியுள்ள அதிகாரத்தையும் கைவிட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் தொலைதொடர்பு மீதான கட்டுப்பாடுகளை தகர்த்து வன்முறையில் இருந்து விலகி செயற்பட வேண்டும் எனவும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கோரியுள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ஹிஜாப் சர்ச்சைக்கு மலாலா கருத்து

இந்திய ஜனாதிபதி வைத்தியசாலையில்

நடிகை குஷ்பு கைது