வகைப்படுத்தப்படாத

மட்டக்களப்பிலும் பூரண ஹர்த்தால்

(UDHAYAM, COLOMBO) – இலங்கை அரசினதும், சர்வதேசத்தினதும் கவனத்தை ஈர்க்குமுகமாக இன்று (27) வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் பேசும் மக்கள் வர்த்தக நிலையங்களை மூடி ஹர்த்தால் அனுஸ்ட்டிக்கின்றனர்.

அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டத்திலும் பரவலாக வர்த்தக நிலையங்கள், பொதுச் சந்தைத் தொகுதிகள், உள்ளிட்ட பல மூடப்பட்டுள்ள இந்நிலையில் அரச மற்றும் தனியார் வங்கிகளும் இயங்கவில்லை என எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இலங்கைப் போக்குவரத்திற்குச் சொந்தமான அரச போக்குவரத்துக்கள் இடம்பெறுவதோடு, நீண்ட தூரங்களுக்காக ஒரு சில தனியார் போக்குவரத்துக்களும் ஈடுவடுவதை அவதானிக்க முடிகின்றது.

இருந்த போதிலும் வீதிகளில் சன நடமாட்டம் குறைவாகவும், வீதிகள் வெறிச்சோடிக் காணப்படுவதையும் அவதானிக்க முடிவதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

இன்றைய தினம் ஹர்த்தால் அனுஸ்ட்டிப்புக்கு கிளிநொச்சி மாவட்ட மக்கள், தமிழ் மக்கள் பேரவை, தமிழ் தேசியக் கூட்டமைப்பு, காணாமல் போனவர்களின் மட்டக்களப்பு மாவட்ட உறவினர்களின் அமைப்பு உள்ளிட்ட பல பொது அமைப்புக்கள், வேண்டுகோள் விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

லக்‌ஷ்மன் யாபாவின் மகனை கைது செய்யுமாறு வௌியிடப்பட்டிருந்த பிடியாணை மீளப்பெறப்பட்டது

உயர்மட்ட இராணுவ அதிகாரிகள் பணிநீக்கம்

ஈராக்கிற்கு 2 பில்லியன் டாலர் வழங்கும் குவைத்