உள்நாடு

மார்ச் முதல் வாரத்திலிருந்து 60 வயதுக்கு மேற்பட்டோருக்கும் தடுப்பூசி

(UTV | கொழும்பு) –   கொரோனா தடுப்பூசி மார்ச் முதல் வாரத்திலிருந்து 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு வழங்கப்படுமென எதிர்பார்ப்பதாக ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்று நோயியல் கொரோனா தடுப்பு அமைச்சின் ஊடகச் செயலாளர் துஷித்த ஜெயவர்தன தெரிவித்தார்.

மேலும் 9 மில்லியன் கொவிஷீல்ட் தடுப்பூசிகளைக் கொள்வனவு செய்ய அரசாங்கம் ஏற்கனவே பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அவர் கூறினார்.

இந்தத் தடுப்பூசி முதலில் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு வழங்கப்படுவதுடன் பின்பு மற்றவர்களுக்கு வழங்கப்படும் என்று ஜெயவர்தன கூறினார்.

இந்திய அரசாங்கம் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கிய 5 லட்சம் கொவிஷீல்ட் தடுப்பூசிகளின் விநியோகம் ஜனவரி 29இல் ஆரம்பமாகியமையும் குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இரண்டாவது இடைக்கால அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு

சிரேஷ்ட ஊடகவியலாளர் எட்வின் ஆரியதாஸ காலமானார்

சுற்றுலா வீசாவை அதிரடியாக தடை செய்தது இலங்கை!