உள்நாடு

கொரோனா தடுப்பூசி பெற்றோரின் எண்ணிக்கை இலட்சத்தினை தாண்டியது

(UTV | கொழும்பு) – கொரோனா தொற்றை தடுப்பதற்கான அரசாங்கத்தின் வேலைத்திட்டத்திற்கு அமைவாக, இதுவரை ஒரு இலட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.

நாட்டில் கடந்த 29ம் திகதி கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது.

இதன்படி, கடந்த ஐந்து நாட்களாக தொடர்ச்சியாக தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

முப்படையினர், சுகாதார துறையினர், பொலிஸார் உள்ளிட்டவர்களுக்கு முதற்கட்டமாக இவ்வாறு கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டு வருகின்றது.

இதன்படி, இதுவரை 1,18 767 பேருக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவினால், 5 இலட்சம் oxford-astrazeneca covishield எனும் கொரோனா தடுப்பூசிகள் இலங்கைக்கு வழங்கிவைக்கப்பட்டன.

இந்த தடுப்பூசியானது ஒரு நபருக்கு இரண்டு ஊசிகள் வீதம் செலுத்தப்படவேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நாட்டில் முதலாவது தடவைக்கான ஊசிகளே இதுவரையில் வழங்கப்பட்டுள்ளதுடன், அடுத்துவரும் இரண்டு வாரங்களில் இரண்டாம் கட்ட ஊசிகளும் வழங்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இந்தியன் இழுவை மடி படகையும் உள்ளூர் இழுவைமடி படகுகளையும் தடுக்க கோரி யாழில் மீனவர்கள் போராட்டம்….!

மலேசிய வேலைகளுக்கு அரச பணியாளர்கள்

ஜோன்ஸ்டனுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்