உள்நாடு

பாடசாலைகளில் மாணவர்களை சேர்த்துக் கொள்ளும் நடவடிக்கை பிற்போடப்பட்டது

(UTV | கொழும்பு) – 2020 ஆண்டுக்கான தரம் 5 புலமை பரிசில் பரிட்சை பெறுபேறுகளின் வெட்டுப் புள்ளிகள் அடிப்படையில் பாடசாலைகளில் மாணவர்களை சேர்த்துக் கொள்ளும் நடவடிக்கை சுமார் ஒரு மாத காலத்திற்கு பிற்போடப்பட்டுள்ளதாக, கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.

2020 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான பாடசாலை ரீதியிலான வெட்டுப்புள்ளிகள் கடந்த ஜனவரி மாதம் 15 ஆம் திகதி வௌியாகியிருந்தன.

எவ்வாறாயினும், குறித்த வெட்டுப்புள்ளிகள் வௌியிடப்பட்ட முறை தொடர்பில் பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ஒரு நவீன நாட்டிற்காக மனசாட்சியுடன் நம்மை அர்ப்பணிப்போம்

மேலும் 229 பேர் அடையாளம்

நாளாந்த மின் உற்பத்திக்காக 3,500 மெட்ரிக் டன் டீசல்