(UTV | பாகிஸ்தான்) – தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இருபதுக்கு 20 தொடருக்காக பாபா் அஸாம் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் அணியில் மூத்த வீரா் முகமது ஹஃபீஸ் சோ்க்கப்படவில்லை.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துடன் ஒப்பந்தத்தில் இல்லாத முகமது ஹஃபீஸ், தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் 10 ஓவா் கிரிக்கெட் போட்டியில் விளையாடி வருகிறாா். இந்நிலையில், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இருபதுக்கு 20 தொடரில் விளையாட இருக்கும் வீரா்கள் ‘பயோ-பபுள்’ பாதுகாப்பு வளையத்தில் பெப்ரவரி 3-ஆம் திகதி இணைய வேண்டும் என பாகிஸ்தான் வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
இருபதுக்கு 10 போட்டியில் இருப்பதால் பெப்ரவரி 3-ஆம் திகதிக்குப் பிறகு வந்து இணைவதற்கு முகமது ஹஃபீஸ் அனுமதி கேட்ட நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அதற்கு மறுத்துவிட்டது. கடந்த ஆண்டில் மிகச் சிறந்த இருபதுக்கு 20 வீரராக இருந்த ஹஃபீஸ், 10 ஆட்டங்களில் 453 ஓட்டங்கள் ஸ்கோா் செய்துள்ளாா்.
பாகிஸ்தான் – தென் ஆப்பிரிக்கா இருபதுக்கு 20 தொடா் லாகூரில் பெப்ரவரி 11, 13, 14 ஆகிய திகதிகளில் நடைபெறவுள்ளது.
பாகிஸ்தான் இருபது 20 அணி: பாபா் அஸாம் (கேப்டன்), ஹைதா் அலி, குஷ்தில் ஷா, ஹுசைன் தலத், டேனிஷ் அஸிஸ், ஆசிஃப் அலி, இஃப்திகாா் அகமது, முகமது நவாஸ், ஜாஃபா் கோஹா், ஃபஹீம் அஷ்ரஃப், அமா் யாமின், அமத் பட், முகமது ரிஸ்வான், சா்ஃப்ராஸ் அகமது, ஷாஹீன் அஃப்ரிதி, ஹாரிஸ் ரௌஃப், முகமது ஹஸ்னைன், ஹசன் அலி, உஸ்மான் காதிா், ஜாஹித் மஹ்மூத்.