கிசு கிசு

இலங்கைக்கு தடுப்பூசி வழங்க முட்டி மோதும் ரஷ்யா, சீனா

(UTV | கொழும்பு) – இலங்கையில், Sputnik V கொரோனா தடுப்பூசியினை உற்பத்தி செய்ய ரஷ்யா விருப்பம் தெரிவித்துள்ளதாக, ஆங்கில நாளிதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அத்துடன், தேசிய ஓளடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் அனுமதி பெறுவதற்காக ரஷ்யா காத்திருப்பதாகவும் குறித்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sputnik V கொரோனா தடுப்பூசி ஏற்கனவே இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டு வருவதுடன், 300 மில்லியன் தடுப்பூசிகளை உற்பத்தி செய்வதற்கு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், Sputnik V கொரோனா தடுப்பூசி இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட மாட்டாது எனவும், குறைந்த செலவில் தயாரித்து உள்ளூரில் பயன்படுத்துவதற்கு இலங்கைக்கு அனுமதி வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சீனாவின் Sinopharm நிறுவனம் இலங்கைக்கு 3 இலட்சம் கொரோனா தடுப்பூசிகளை இலவசமாக வழங்க முன்வந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

எதிர்வரும் 72 மணித்தியாலங்கள் தீர்மானமிக்கது

நிகழ்ச்சிக்கு இப்படியா ஆடையணிந்து வருவது?

பேக்கரி பொருட்களின் விலை மேலும் உயர்வு?