உலகம்

மியன்மார் இராணுவ கட்டுப்பாட்டின் கீழ் [UPDATE]

(UTV |  மியன்மார்) – மியன்மார் தலைவர் ஆங் சான் சூகி உள்ளிட்ட தலைவர்கள் அந்நாட்டு இராணுவத்தினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள நிலையில் நாடு முழுவதுமாக இராணுவ கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாக அந்நாட்டு இராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது.

மியன்மார் நாட்டில் கொரோனா தொற்று அச்சுறுத்தலுக்கு மத்தியில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது. மொத்தமுள்ள 642 இடங்களுக்கு அந்நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி தலைமையிலான தேசிய ஜனநாயக கட்சி உள்பட 90-க்கும் மேற்பட்ட கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

இந்த தேர்தலில் எதிர்பார்த்ததைவிட அதிக எண்ணிக்கையிலான வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில், ஆட்சி அமைப்பதற்கு தேவையான பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றதாக ஆங் சான் சூகியின் தேசிய ஜனநாயக கட்சி அறிவித்தது.

இந்நிலையில் ஆங் சான் சூகி இராணுவத்தினால் சிறைபிடிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. மியான்மரில் ஆங் சான் சூகி உள்ளிட்ட தலைவர்கள் இராணுவத்தினால் சிறைபிடிக்கப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ஈரானில் தொடரும் போராட்டம்

இங்கிலாந்து மன்னர் வைத்தியசாலையில் அனுமதி!

உக்ரேன் நெருக்கடி தொடர்பான ரஷ்ய – அமெரிக்க மாநாடு