(UTV | கொழும்பு) – கொவிட் 19 தொற்றினால் மரணிக்கும் நபர்களின் உடல்களை அப்புறப்படுத்தும் போது, இலங்கை மதங்களது நம்பிக்கைகளை மதிக்க வேண்டும் என அமெரிக்கா மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
சர்வதேச பொது சுகாதார வழிகாட்டுதல்களின்படி, மத நம்பிக்கைகள் மற்றும் கலாச்சார மரபுகளுக்கு இடமளிக்குமாறு அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகார பணியகம், தனது ருவிட்டர் தளத்தினூடாக இலங்கை அரசாங்கத்திடம் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளது.
COVID-19’s tragedy has taken too many lives. We urge Gov of Sri Lanka to respect & accommodate religious faiths & cultural traditions, in accordance w/international public health guidelines, so that people can say farewell to their loved ones in ways consistent w/their beliefs.
— State_SCA (@State_SCA) January 29, 2021
“சர்வதேச மற்றும் உலக சுகாதார ஸ்தாபனத்தின் வழிகாட்டுதல்களுக்கு அமைய இந்த நடவடிக்கையை இலங்கை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும். மேலும் மக்கள் தமது அன்புக்குரியவர்களுக்கு மத நம்பிக்கைகளுக்கு இணங்க விடை கொடுக்கும் உரிமை அவர்களுக்கு இதனூடாக கிடைக்கும். ஆகவே ஒவ்வொரு சமூகங்களினதும் மரணங்கள் தொடர்பான மத நம்பிக்கை மற்றும் கலாசார மரபுகளுக்கு இடமளிக்க வேண்டும்” என குறித்த ட்விட்டர் பக்கத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්