(UTV | கொழும்பு) – கொவிட்-19 காரணமாக நாடளாவிய ரீதியாக மரணித்தோரின் எண்ணிக்கை 300 ஐ கடந்துள்ளது.
கடந்த 24 மணித்தியாலத்தில் 8 கொவிட்-19 மரணங்கள் பதிவானமையை அடுத்து மரணித்தவர்களின் எண்ணிக்கை 305 ஆக அதிகரித்துள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.