வணிகம்

மீள்சுழற்சி செய்யக்கூடிய PET பிளாஸ்டிக் கழிவுகளை பயன்படுத்துதல்

(UTV | கொழும்பு) – “கட்டுப்படுத்துதல், மீள் பயன்பாடு மற்றும் மீள்சுழற்சி செய்தல்” – போன்ற வார்த்தைகளை பாடசாலையில், விழிப்புணர்வு பிரசாரங்கள் மற்றும் தொலைக்காட்சியில் நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். பொதுவாக பயன்படுத்தப்படும் இவ் வார்த்தைகள், கேட்பவர்களின் மனநிலையை உற்சாகத்துடனும் நம்பிக்கையுடனும் செயற்படுத்துவதற்கும் அடிப்படையில் சரியானதை செய்வதற்கும் சுற்றுச் சூழலை பாதுகாக்கும் முயற்சிகளுக்கு உதவ எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கையில், கழிவுகளைப் பிரித்தல், நிர்வகித்தல் என்பது திறமையின்மை மற்றும் முறையாக செயற்படுத்தப்படாததால் படிப்படியாக இழிநிலையை உருவாக்கி வருகிறது. மேல்மாகாணத்தில் மாத்திரம் ஒவ்வொரு நாளும் சுமார் 7,500 மெட்றிக் தொன் கழிவுகள் சேர்கின்றன, அதில் 3,500 மெட்றிக் தொன் மாத்திரமே சேகரிக்கப்படுகின்றன (மத்திய மீள்சுழற்சி ஆணையம், 2018).

கடந்த சில ஆண்டுகளாக, இம் மோசமான நடைமுறைகள் காரணமாக, இட நெருக்கடி, சுற்றுச்சூழல் சீர்கேடு மற்றும் பொருளாதார பின்னடைவுக்கு இவை காரணமாக அமைந்தன. வீடுகள் முதல் நகராட்சிகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்கள் வரை அனைத்து பங்குதாரர்கள் மத்தியிலும் கழிவுகளை அகற்றுதல், பிரித்தல் மற்றும் நிர்வகிப்பு நடைமுறைகள் காரணமாக சரியாக மீள்சுழற்சி செய்யக்கூடிய பொருட்கள் வீணாகின்றன.

இப்போது நமக்கு தெரிந்த வகையில், இவ் ஆண்டு ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக் மீதான தடையை அரசாங்கம் நடைமுறைப்படுத்தும். இதுவொரு நிலையான நடவடிக்கை என்றாலும், PET போன்ற பிளாஸ்டிக், சமூகங்கள் மற்றும் ஒட்டுமொத்த பொருளாதாரத்திற்கு விலைமதிப்பற்ற பங்களிப்பை வழங்குவதால், இந் நிலைமையை சந்திக்கவில்லை என்பதை உறுதிப்படுத்த ஒரு புத்தாக்கமான தீர்வை அமுல்படுத்த வேண்டும்,

பெக்கேஜிங்கில் பிளாஸ்டிக்கைப் பயன்படுத்துவதற்கான திறன், நாடு முழுவதும் உள்ள சமூகங்களுக்கு தயாரிப்புக்களை மேலும் பெற்றுக் கொள்ளக் கூடியதாகவும் அணுகக்கூடியதாகவும், மலிவு விலையிலும் மாற்றிக் கொள்வதற்கான வசதிகள். இத்தகைய பெக்கேஜ்கள் பொதுவாக உற்பத்தி செய்ய மலிவானவை, குறைந்தபட்ச சேதங்கள் மற்றும் களஞ்சியப்படுத்தக் கூடிய காரணத்தினால் போக்குவரத்திற்கும் இலகுவானது. அவை மற்ற பொருட்களை விட உற்பத்தியின் போது குறைந்த காபன் வெளியேற்றத்தை உருவாக்கின்றன.

இம்மலிவான மாற்றத்தினால் பெரும்பாலான கிராமப்புற சமூகங்களுக்கு பானங்களை
பெற்றுக் கொள்ள முடிந்துள்ளது, ஏனென்றால் இதுபோன்ற தயாரிப்புக்களை நாட்டின் அதிக வசதியான பகுதிகளுக்கு மட்டுப்படுத்தியுள்ளனர். இதற்கு சிறந்த உதாரணம் சிறு பால் பைக்கெட் (Minlk Sachet) சிறிய அளவிலான பால் தயாரிப்பு ஆகியவற்றை கூறலாம். இலங்கையில் கிராமப்புறங்களில் பால் மற்றும் பால் உணவுத் தயாரிப்பு செலவீனங்களுக்காக சராகரியாக 7.8% செலவிடப்படுகிறது என வருமான மற்றும் செலவுக் கணக்கெடுப்பின் (2016) தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே விலையை பொருளாதார விலையில் வழங்கும் திறன் என்பது சில சமூக – பொருளாதார குழுக்களுக்கு தயாரிப்புக்கள் இனி நிதி வரம்பில் இல்லை என்பதைக் குறிக்கும். இந்த தயாரிப்புக்களுக்கான அவர்களது கேள்விகளும் தேவைகளும் தொடர்ந்து காணப்படும்.
இதனால் தான் நீண்ட காலத்திற்கு கழிவுகளைக் குறைத்தல் மற்றும் மீள்சுழற்சி செய்வது தொடர்பான பிரச்சினையை மூலோபாய ரீதியாக எதிர்கொள்வது மிக முக்கியமானது.

எமது தற்போதைய கழிவு நிர்வகிப்பு கட்டமைப்பிலுள்ள சிக்கல்கள் கழிவு நிர்வகிப்புக்கு வீட்டிலுள்ள கழிவு நிர்வகிப்பிலிருந்து சீர்திருத்தம் செய்யவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. முறையற்ற விதத்தில் கழிவுகளை சேகரித்தல் மற்றும் பிரிக்கும் முறைகள் சீர்திருத்தப்பட வேண்டும், ஏனென்றால் வீடுகளிலுள்ளவர்கள் தங்கள் கழிவுகளை சேகரிப்பதற்காக பிரித்தாலும், மீள்சுழற்சி செய்யக்கூடிய கழிவுகள் மற்ற கழிவுகளுடன் சேகரிக்கப்பட்டு மாசுபடுத்தப்படுகின்றன.

மீள்சுழற்சி செய்யப்படாது, தனித்தனியாக சேகரிக்கப்பட்ட கழிவுகள் அதே நிலப்பரப்பில் மீண்டும் கொட்டப்படுவதால் கழிவுகளைப் பிரிக்கும் செயற்பாடுகளில் எவ்வித பலனும் இல்லாமல் போய்விடுகின்றன. கொள்கை அமுலாக்கம் மற்றும் மீள்சுழற்சி மேற்பார்வை இல்லாதது தனியார் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழிலாளர்களுக்கு (SME) பிளாஸ்டிக் கழிவு சேகரிப்பாளர்களையும், கழிவு பிரிப்பவர்களையும் முன்னேற்றத் தூண்டியுள்ளது. இலங்கையில் தற்போது 300க்கும் மேற்பட்ட பதிவு செய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யப்படாத பிளாஸ்டிக் சேகரிப்பாளர்கள், மீள்சுழற்சி செய்பவர்களின் வலைப்பின்னல் ஒன்று உள்ளது (மத்திய சுற்றுச் சூழல் ஆணையம், 2019).

இத் துறையை மேலும் பலப்படுத்த வேண்டும், ஏனென்றால் இச் சிறு வர்த்தகங்களுக்கு திறமையான கழிவு மீள்சுழற்சி நடைமுறைகளை செயல்படுத்த தேவையான உட்கட்டமைப்போ அல்லது ஆதரவோ இல்லாத நிலையே காணப்படுகின்றன.

என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும்?
முதன்மையாக, நாட்டில் கழிவு நிர்வகிப்பு செயன்முறைகளை அரசாங்கம் மதிப்பீடு செய்து சுத்திகரிக்க வேண்டும். உள்ளுர் அதிகாரிகள் மற்றும் நகராட்சிகள் தடையற்ற கழிவு நிர்வகிப்பு முறையை செயல்படுத்துவதை உறுதி செய்யும் ஒரு புத்தாக்கம் கொண்ட மூலோபாயத்தை அவர்கள் ஊக்குவிக்க வேண்டும், கடுமையான நெறிமுறைகள் மற்றும் கழிவுகளை சேகரிப்பதற்கும் பிரிப்பதற்கும் ஏற்பாடுகள் உள்ளன. இது மீள்சுழற்சி துறையை மேம்படுத்த உதவும்.

அரசாங்கத்தைத் தவிர, விரிவாக்கப்பட்ட தயாரிப்பாளர் பொறுப்பு (EPR) கொள்கையுடன் பிளாஸ்டிக் கழிவுகளை முறையாக அகற்றுவதற்கும் பிரிப்பதற்கும் ஊக்குவிப்பதில் உற்பத்தியாளர்கள் பெரும்பங்கு வகிக்கின்றனர், அங்கு உற்பத்தியாளர்கள் நுகர்வோர் மற்றும் முந்தைய நுகர்வோர் தயாரிப்பு முறைகள் மற்றும் அகற்றுவதற்கான பொறுப்பை ஏற்றுக் கொள்கிறார்கள். இதன் ஆரம்பகட்டமாக, PET போத்தில்கள் மற்றும் பெரிய குளிர்பான தயாரிப்புக்களின் உற்பத்தியாளர்கள் தங்கள் போத்தில்கள் மற்றும் போத்தில் மூடிகளை தரப்படுத்தலாம்.

மேலும் அவற்றின் அனைத்து போத்தில்களையும் வெளிப்படையானதாக மாற்றலாம், ஏனென்றால் இது பிரித்தல் செயன்முறைக்கு உதவவும் எளிதாக்கவும் முடிவதுடன் மீள்சுழற்சி செய்பவர்களுக்கு போத்தில்கள் வரும்போது சுத்தம் செய்தல் மற்றும் மீள்சுழற்சி செய்தல், பிந்தய நுகர்விற்கும் பயன்படுத்த முடியும். பின்பற்ற வேண்டிய உரிய மீள்சுழற்சி முறைகள் குறித்து நுகர்வோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், மீள்சுழற்சி செய்யக்கூடிய கழிவுகளை முறையாக அகற்றுவதற்குமான நடைமுறைகளை பாதிக்கும், கடற்கரை மற்றும் சுற்றுலா பயணிகள் அதிகமாக வருகை தரும் இடங்களை சுத்தப்படுத்தும் திட்டங்கள்.

இதேபோன்ற முயற்சிகள் மூலம் அதிக பொது ஈடுபாட்டை அடைய முடியும். எடுத்துக்காட்டாக, “Coca-Cola Sri Lanka’s Give Back Life” முயற்சியுடன் இணைந்து கதிர்காமம் கழிவு நிர்வகிப்பு திட்டம் போன்ற ஆண்டு முழுவதும் Eco-Spindles போன்ற திட்டங்களை ஆரம்பித்துள்ளது, கடந்த 2019ஆம் ஆண்டில் மதஸ்த்தளத்திலிருந்து 4,227kg கிலோ எடையுள்ள PET பிளாஸ்டிக்கினை பெற்றுக் கொண்டோம்.

இதுவொரு சேகரிப்பு இயக்க செயற்பாடு மட்டுமல்லாமல், யாத்திரீகர்களும், பார்வையாளர்களும் தங்களது பிளாஸ்டிக்கை அகற்றுவதைப் பற்றி அதிக விழிப்புடன் இருக்குமாறு ஊக்குவித்துள்ளோம். இதன்மூலம் இது ஒரு முன்முயற்சியை விடவும் – மாறாக, ஒரு இயக்கமாக, தங்கள் சொந்த வீட்டிலிருந்து பிளாஸ்க் கழிவுகளை வழங்குவதன் மூலம் பணியிடங்கள் மற்றும் மக்கள் சமூகங்கங்களை அதிக பங்களிப்பு செய்ய ஊக்குவிக்கிறது.

PET பிளாஸ்டிக் ஒரு கழிவல்ல, அதுவொரு மதிப்புமிக்க பொருளாகும் இலங்கையின் மீள்சுழற்சி துறையின் ஆற்றல் மிக அதிகமாக உள்ளபோதிலும், இது கடந்த காலங்களில் கவனிக்கப்படாமல் போய்விட்டது. மிகவும் பொருளாதார ரீதியாக பயனளிக்கும் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஒன்று, இவை சுழற்சி முறையிலான பொருளாதாரத்தின் வளர்ச்சி ஆகும், இது மீள்சுழற்சி மூலம் ஒரு முக்கிய உந்துதலாக இருக்கும், இது தடையற்ற மற்றும் புத்துணர்ச்சியூட்டும் தொழில் ஆயுட்காலம் என உறுதியளிக்கிறது, தனியார் SME சேகரிப்பாளர்கள் மற்றும் வேறு பிரிப்பவர்களுக்கும் பயனளிக்கிறது.

ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக்குகளுக்கு அரசாங்கத்தினால் அமுல்படுத்தவுள்ள தடை மற்றும் நிலையான சூழலை மேம்படுத்துவதற்கும் பாதுகாப்பதற்கும் ஒரு குறிக்கோளுடன், இலங்கையின் கழிவு நிர்வகிப்பதில் நிலவும் பிரச்சினைகள் ஒரு செயல்திறன் மிக்க அணுகுமுறையுடன் தீர்க்கப்பட வேண்டும், வெறுமனே கழிவு நிர்வாகத்தை வலுப்படுத்துவதன் மூலமும், மீள்சுழற்சி செய்யக்கூடிய பொருட்களின் திறனை முழுமையாக உணர்ந்து கொள்வதன் மூலமும் இதனை மேற்கொள்ள முடியும். சற்று கற்பனை செய்து பாருங்கள்! நம் கழிவுகளை பிரித்து நிர்வகிப்பதில் எச்சரிக்கையாகவும், புத்திசாலித்தனமாகவும் இருக்க வேண்டும்.

இது நமது சுற்றுச்சூழல் வளத்தை வெகுவாக பாதிக்கும், இல்லையெனில் தூய்மையான பொருட்களின் பயன்பாட்டால் பெரிதாக்கப்படும், அதற்குப்பதிலாக மீள்சுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக்கை உற்பத்தி செய்ய முடியும். அனைவருக்கும் உண்மையிலேயே கொள்கை சார்ந்த பொருளாதார மற்றும் சுற்றுச் சூழல் வெற்றியளிக்கட்டும்.

(எழுதியவர் முகாமைத்துவப் பணிப்பாளர் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி – BPPL Holdings PLC)

Related posts

முட்டை விலையும் அதிகரிப்பு

சீகிரியாவை பார்வையிட வருபவர்களுக்கு ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ள வாய்ப்பு…

இலங்கை வங்கி துருனு திரிய கடன் திட்டத்தின் கீழ் 664 பேருக்கு கடன்…