(UTV | கொழும்பு) – எதிர்வரும் பெப்ரவரி மாதம் 12 ஆம் திகதி , கோப் குழுவில் முன்னிலையாகுமாறு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இலங்கையில் இடம்பெறும் சிறுவர் துஷ்பிரயோகங்கள் குறித்த விசேட கணக்காய்வு அறிக்கை பரிசீலிக்கப்படவுள்ளதாக பாராளுமன்ற தொடர்பாடல் பிரிவு இன்று(29) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், கண்டி மாவட்டத்தில் மண்சரிவு அபாயம் காணப்படும் பகுதிகளில் வசிக்கும் மக்களை மீள் குடியேற்றும் வேலைத்திட்டத்தின் பகுப்பாய்வு பெப்ரவரி மாதம் 24ம் திகதி இடம்பெறவுள்ளது.
இந்நிலையில் இலங்கையில் பிளாஸ்டிக் பயன்பாடு தொடர்பான விசேட கணக்காய்வு அறிக்கை பெப்ரவரி 26ம் திகதி பரிசீலிக்கப்பட உள்ளதாக கோப் குழுவின் தலைவர் பேராசிரியர் சரித்த ஹேரத் மேலும் தெரிவித்துள்ளார்.