(UTV | இந்தியா) – இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதன் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே.
இந்த ஊரடங்கு உத்தரவில் ஒரு சில தளர்வுகள் அவ்வப்போது அறிவிக்கப்பட்டது என்பதும் இருப்பினும் ஊரடங்கு உத்தரவு ஒவ்வொரு மாதமும் நீட்டிக்கப்பட்டு வருகிறது என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் ஜனவரி 31ஆம் திகதியுடன் முடிவடைந்த நிலையில் தற்போது பெப்ரவரி 28 வரை ஊரடங்கு உத்தரவு நீடிப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
மேலும் திரையரங்குகளில் 50%க்கு அதிகமானோரை அனுமதிக்கலாம் என்றும் மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் திரையரங்கு உரிமையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.