உள்நாடு

தெனுவர மெனிக்கே : மறுஅறிவித்தல் வரை இடைநிறுத்தம்

(UTV | கொழும்பு) – மலையக ரயில் மார்க்கத்திலான தெனுவர மெனிக்கே ரயில் சேவை மறுஅறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி கொழும்பில் கோட்டை ரயில் நிலையத்தில் பதுளை நோக்கி பயணிக்கும் 1001 இலக்க தெனுவர மெனிக்கே ரயில் இன்று(28) முதல் மறுஅறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பதுளையில் இருந்து கொழும்பு கோட்டை ரயில் நிலையம் நோக்கி பயணிக்கும் 1002 இலக்கமுடைய தெனுவர மெனிக்கே ரயில் நாளை(29) முதல் மறுஅறிவித்தல் வரை இடைநிறுத்தப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த ரயில்களில் பயணிப்பதற்காக முன்பதிவுகளை மேற்கொண்டவர்கள் கொழும்பில் இருந்து பதுளை நோக்கி பயணிக்கும் 1005 இலக்கமுடைய பொடி மெனிக்கே ரயில் மற்றும் பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் 1006 இலக்கமுடைய உடரட்ட மெனிக்கே ரயிலில் பயணிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய குறித்த பயணிகள் இன்று முதல் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 11 ஆம் திகதி வரை குறித்த ரயில்களில் பயணிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

 

Related posts

பேக்கரிகளுக்கு பூட்டு

ஹரின் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜர்

ஜனாதிபதி அநுரவை சந்தித்தார் தென் கொரிய தூதுவர்

editor